அரசு ஊழியர்கள் 23-ம் தேதி முதல்வரைச் சந்திக்க முடிவு

விருதுநகர் மாவட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய சுப்பிரமணியனின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்க முடிவு செய்திருக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் எஸ். தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெ.லெட்சுமி நாராயணன், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி பல அறவழிப்போராட்டங்களை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை அப்போதைய அ.தி.மு.க அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. தொலை தூரங்களுக்கு பணியிட மாறுதல் செய்து பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கியது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் எஸ். தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெ.லெட்சுமி நாராயணன், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் எஸ். தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெ.லெட்சுமி நாராயணன், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை

அரசு ஊழியர் போராட்டங்களை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர், ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் தலைமை ஏற்று நடத்தினர். கடந்த 31.5.2019-ம் தேதி பணி ஓய்வு பெற வேண்டிய சுப்பிரமணியன், அன்றைய தினம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அரசியல் உள்நோக்கத்தில் சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சுப்பிரமணியன் மீதான குற்றசாட்டுக்களை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனாலும் அ.தி.மு.க அரசு, சுப்பிரமணியனை பழிவாங்கும் எண்ணத்தோடு அவரின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்யவில்லை.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் தண்டனை வழங்கப்பட்டிருப்பின் அந்த தண்டனைகளை முற்றிலும் ரத்து செய்வதாக 2.2.2021-ம் தேதி முந்தைய தமிழக அரசு அரசாணை எண் 9 ஐ வெளியிட்டு அறிவிப்பு செய்தது. ஆனாலும் சுப்பிரமணியனின் தற்காலிக பணி நீக்கம் ரத்து செய்யப்படவில்லை.

தமிழகத்தில்புதிய அரசு பொறுப்பேற்றபின் சுப்பிரமணியனின் தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி உள்ளாட்சி அமைச்சர் உள்பட பல அமைச்சர்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் முறையிட்டனர். அதன்பிறகும் இதுவரை சுப்பிரமணியனின் தற்காலிக பணிநீக்கம் ரத்து செய்யப்படாமல் உள்ளது.

உயர்நீதிமன்றமே சுப்பிரமணியன் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்த பிறகும் கூட அவரது தற்கபாலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய மறுக்கும் ஊரக வளர்ச்சி துறை நிர்வாகத்தின் போக்கு, தமிழக அரசின் மீது அரச ஊழியர்களுக்கு அதிருப்தியையும் வேநம்பிக்கையினையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தநிலையில் கடந்த 12.7.2021-ம் தேதி காணொலி மூலம் நடந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்ட நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் அனைவரும் 23.7.2021-ம் தேதி நேரில் சந்தித்து சுப்பிரமணியனின் தற்காலி பணிநீக்கத்தை ரத்து செய்து ஓய்வூதிய பலன்கள் பெற உத்தரவிடக்கோரி முறையீடு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

Support our YouTube channel

https://www.youtube.com/channel/UCUJKEellp__cXrCcVBtXMeg

One thought on “அரசு ஊழியர்கள் 23-ம் தேதி முதல்வரைச் சந்திக்க முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *