அரசு ஊழியர்கள், ஆர்ப்பாட்டம் , முதல்வர் ஸ்டாலின், புதிய பென்சன் திட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி புதிய காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளைக் களைந்து, கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சோ. நடராஜன் தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரேமா ஆனந்தி நன்றி கூறினார்.

15 பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இது பற்றி மாவட்டத் தலைவர் சோ. நடராஜன் கூறுகையில் அரசு ஊழியர்களுக்கான புதிய காப்பீட்டு திட்டம் 2021-25-க்கு புதுப்பிக்கப்பட்டது. ஏற்கனவே ரூ.180/- என்றிருந்த சந்தாவை ரூ.300/- உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் ரூபாய். 4/-லட்சமாக இருந்த தொகையை வெறும் ரூபாய். 5/- லட்சமாக மட்டுமே உயர்த்தினர்.

அதே போல் சட்டசபையில் 110 விதிகளின் கீழ் தமிழக முதல்வர் அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்தப்படும் என அறிவித்தார்.

ஆனால் மருத்துவமனைகளில் முன்பணம் செலுத்தாமல் ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மருத்துவச் செலவில் வெறும் 40 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. மீதம் தொகையை செலுத்தத் சொல்லி மருத்துவமனை நிர்வாகத்தால் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. சங்கத்திலிருந்து தலையிட்டால் 75 சதவீதத் தொகை வழங்கப்படுகிறது.

மேலும் இதுவரை ஒரு நிறுவனத்திடமிருந்து மூன்றாம் நபர் அனுமதியினை எவ்விதமான வழிகாட்டும் நெறிமுறைகளுமின்றி இரண்டு நிறுவனங்களுக்கு வழங்கி அதிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது தமிழக அரசு.

*எனவே தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்து போன்று அரசு ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும். அதில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *