அரசு ஐடிஐகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தொழிற்பயிற்சி (ஐடிஐ) மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற் பிரிவுகளில் சேர இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு www.skilltraining.in.gov.in இணையதளம் வாயிலாக அக். 12 முதல் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கான கலந்தாய்வு அக். 16, 17-ம் தேதிகளில் நடைபெறும். அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் உதவி மையத்தில் ஆவணங்களுடன் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். தொடர்புக்கு 044-26252463.