மின்சாரம், குடிநீர் இணைப்பு வழங்க புதிய உத்தரவு

மின்சாரம், குடிநீர் இணைப்பு வழங்க புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

“பொது கட்டிட விதிகள் அடிப்படையில் பணி நிறைவு சான்று பெறுவதில் இருந்து சிறிய ரக கட்டிடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12 மீட்டர் உயரம் வரை, 3 வீடுகள் உள்ள குடியிருப்புகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

அதேபோல 8,070 சதுர அடி பரப்பளவுக்கு உட்பட்ட வீடுகள், தொழிற்சாலை கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பணி நிறைவு சான்று கேட்காமல் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் வடிகால் இணைப்புகள் வழங்கலாம்” என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *