அரசு பாலிடெக்னிக் சேர்க்கைக்கு 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

அரசு பாலிடெக்னிக் சேர்க்கைக்கு வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை தரமணி டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு முதலாம் கட்ட, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. 

காலியாக உள்ள டிப்ளமோ படிப்புகளுக்கு 3-ம் கட்ட கலந்தாய்வுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் வருகிற 31-ம் தேதிக்குள் உரிய சான்றிதழ், ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-22542013 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *