அரசு பள்ளிகளில் 15 லட்சம் மாணவர்கள் சேர்ந்தனர்

அரசு பள்ளிகளில் 15 லட்சம் மாணவர்கள் சேர்ந்தனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. எனினும் 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதுவரை அரசு பள்ளிகளில் 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். வரும் 30-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற உள்ளது. எனவே கூடுதலாக மாணவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளில் படித்த சுமார் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியர் அரசு பள்ளிகளுக்கு திரும்பியிருப்பதாக ஆசிரியர் வட்டாரங்கள் கூறுகின்றன.

வரும் அக்டோபர் 5-ம் தேதிக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவ, மாணவியரின் மொத்த எண்ணிக்கை தெரியவரும் என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *