அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு சபாஷ்…

அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அரசு பள்ளி ஆசிரியைகள் வீடு வீடாக சென்று கல்வி தொலைக்காட்சியில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன என்பது குறித்து பெற்றோருக்கும் மாணவ, மாணவியருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

மாணவரின் தாயாருக்கு கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்த அட்டவணையை தலைமை ஆசிரியை ராணி வழங்குகிறார்.
மாணவரின் தாயாருக்கு கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்த அட்டவணையை தலைமை ஆசிரியை திருமதி வே.ராணி அவர்கள் வழங்குகிறார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் எப்போது திறக்கப்படும் என்பது கணிக்க முடியாத நிலையில் உள்ளது. 

தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆன்லைன் வாயிலாக மாணவ, மாணவியருக்கு பாடம் நடத்தி வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளை நடத்த ஸ்மார்ட்போன், இணைய வசதி தேவை.

வீடுகளுக்கு நேரடியாக சென்று கல்வி தொலைக்காட்சி அட்டவணையை வழங்கும் ஆசிரியை திவ்யா
வீடுகளுக்கு நேரடியாக சென்று கல்வி தொலைக்காட்சி அட்டவணையை வழங்கும் ஆசிரியை திருமதி திவ்யா

ஆனால் பெரும்பாலான அரசு பள்ளி மாணவ, மாணவியர் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதால் ஸ்மார்ட்போன், இணைய வசதியை ஏற்பாடு செய்வது கடினமாக உள்ளது. 

இதன்காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்த முடியவில்லை.

வீடுகளுக்கு நேரடியாக சென்று கல்வி தொலைக்காட்சி அட்டவணையை வழங்கும் ஆசிரியை சாந்தகுமாரி
வீடுகளுக்கு நேரடியாக சென்று கல்வி தொலைக்காட்சி அட்டவணையை வழங்கும் ஆசிரியை திருமதி சாந்தகுமாரி

இதை கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு சார்பில் தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தப்படுகிறது. 

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மட்டுமன்றி தனியார் தொலைக்காட்சிகளும் பாடங்களை ஒளிபரப்பு செய்து வருகின்றன.

வீடுகளுக்கு நேரடியாக சென்று கல்வி தொலைக்காட்சி அட்டவணையை வழங்கும் ஆசிரியை ரஷியா
வீடுகளுக்கு நேரடியாக சென்று கல்வி தொலைக்காட்சி அட்டவணையை வழங்கும் ஆசிரியை திருமதி ரஷியா

கள்ளிக்குப்பம் அரசு பள்ளி

அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

வில்லிவாக்கம் ஒன்றிய கூடுதல் வட்டார கல்வி அலுவலர் (பிஇஓ) திருமதி மேரி ஜோஸ்பின் அவர்கள் அறிவுரையின்படி கள்ளிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த 12-ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) கூட்டம் நடைபெற்றது. எஸ்எம்சி தலைவர் சாரதா மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.

மாணவ, மாணவயரின் பார்வைக்காக கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்த அட்டவணை பள்ளியில் ஒட்டப்பட்டுள்ளது.
மாணவ, மாணவயரின் பார்வைக்காக கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்த அட்டவணை பள்ளியில் ஒட்டப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியைகள், பெற்றோர் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

கூட்டம் நடந்த வகுப்பறையின் நுழைவு வாயிலில், கைகளை சுத்தம் செய்ய சானிடைர்  வைக்கப்பட்டிருந்தது. 

எஸ்.எம்.சி. கூட்டத்தில் பங்கேற்க வந்த மாணவரின் தாய், சானிடைசரால் கைகளை சுத்தம் செய்கிறார்.

ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்த பிறகு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சானிடைசரால் கைகளை சுத்தம் செய்யும் பெண்.

தலைமை ஆசிரியை திருமதி வே.ராணி அவர்கள் அறிவுரை

எஸ்எம்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த தலைமை ஆசிரியை திருமதி வே.ராணி அவர்கள் , அனைத்து பெற்றோரையும் இன்முகத்துடன் வரவேற்றார். 

இதன்பின், கல்வி தொலைக்காட்சியில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன என்பது குறித்து பெற்றோருக்கு விரிவாக விளக்கி கூறினார்.

பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களை  மாணவர்கள் நாள்தோறும் பார்ப்பதற்கு பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியை திருமதி வே.ராணி அவர்கள் அறிவுரை வழங்கினார்.   

வீடுகளுக்கு நேரடியாக சென்று கல்வி தொலைக்காட்சி அட்டவணையை வழங்கும் ஆசிரியை வாசுகி
வீடுகளுக்கு நேரடியாக சென்று கல்வி தொலைக்காட்சி அட்டவணையை வழங்கும் ஆசிரியை திருமதி வாசுகி

பிஇஓ திருமதி மேரி ஜோஸ்பின் அவர்கள் அறிவுரைப்படி பள்ளியின் தகவல் பலகையில் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்கள், அவை எந்தெந்த நேரத்தில் ஒளிபரப்பாகின்றன என்பன குறித்த முழுமையான விவரங்கள் அடங்கிய அட்டவணைகள் ஒட்டப்பட்டன.

பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் மாதந்தோறும் மாணவ, மாணவியருக்கு சத்துணவு உணவு பொருட்கள் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாணவர் சேர்க்கை, சத்துணவு உணவு பொருட்கள் வாங்க பள்ளிக்கு வரும் பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் தகவல் பலகை அட்டவணையை பார்த்து பலன் அடைந்து வருகின்றனர்.

வீடுகளுக்கு நேரடியாக சென்று கல்வி தொலைக்காட்சி அட்டவணையை வழங்கும் ஆசிரியை ஷெலின்
வீடுகளுக்கு நேரடியாக சென்று கல்வி தொலைக்காட்சி அட்டவணையை வழங்கும் ஆசிரியை திருமதி ஷெலின்

மேலும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் அனைவரும் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் உள்ள மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களின் முழுவிவர அட்டவணையை வழங்கினர். 

கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கும் ஆசிரியை ஜெயந்தி
அட்டவணையை வழங்கும்போது பாடங்கள் படிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் ஆசிரியை திருமதி ஜெயந்தி.

தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் செயல்படும் கள்ளிக்குப்பம் அரசு பள்ளி ஆசிரியைகளை அப்பகுதி மக்கள் மெச்சி, பாராட்டி வருகின்றனர்.

வீடுகளுக்கு நேரடியாக சென்று கல்வி தொலைக்காட்சி அட்டவணையை வழங்கும் ஆசிரியை மேரி பேட்டர்சன்
வீடுகளுக்கு நேரடியாக சென்று கல்வி தொலைக்காட்சி அட்டவணையை வழங்கும் ஆசிரியை திருமதி மேரி பேட்டர்சன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *