கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை பெறப்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதுகுறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும். விவசாயிகள் அல்லாதோருக்கு தள்ளுபடி கொடுத்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக ஆய்வு செய்து தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.