கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தமிழக ஆளுநர் குணமடைந்தார்

கொரோனா வைரஸ் தொற்ரறில் இருந்து தமிழக ஆளுநர் பன்வாலி லால் புரோஹித் குணமடைந்தார்.
தமிழக ஆளுநர் மாளிகையில் சுமார் 88 ஊழியர்களுக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புஹோஹித்துக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆளுநர் பன்வாரி லால் சேர்க்கப்பட்டார்.

கடந்த இரு வாரங்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காவேரி மருத்துவமனை இன்று வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குணமடைந்துள்ளார்.

அவர் நலமாக உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *