வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது

கொரோனா ஊரடங்கு காலத்தில் 6 மாதங்கள் வங்கிக் கடன் தவணை தள்ளிவைக்கப்பட்டது. பல்வேறு அரசு, தனியார் வங்கிகளில் வட்டிக்கு வட்டி விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடன் தவணையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.எஸ்.ரெட்டி, எம்.ஆர்.ஷா அமர்வு விசாரித்தது.

வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதன்படி மத்திய அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

“கொரோனா ஊரடங்கு காலத்தில் கடன் தவணையை திரும்ப செலுத்த வழங்கப்பட்ட 6 மாத சலுகை காலத்துக்கு வட்டி மீதான வட்டி விதிக்கப்படாது. எனினும் 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு மட்டுமே பொருந்தும்” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு மீண்டும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. அப்போது சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *