முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடி வரை கடன் உதவி வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
“புதிய தொழில்முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (நீட்ஸ்) என்ற சிறப்பு கடன் உதவி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, ஐடிஐ முடித்தவர்கள் கடன் உதவி பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் குறைந்தபட்சம் ரூ.10 லட்சமும் அதிகபட்சம் ரூ.5 கோடியும் கடன் உதவி பெறலாம். கடன் தொகையில் 25 சதவீதம் மானியம் பெறலாம்.
சென்னை மாவட்டத்தை சேர்ந்த புதிய தொழில் முனைவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அறிய அந்த அலுவலகத்தை நேரிலோ அல்லது 95973 73548 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று சென்னை கலெக்டர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.