பொது முடக்க தளர்வுகள் நவ. 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி பொதுமுடக்கம் அமல் செய்யப்பட்டது. கடந்த மே மாதம் வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டது. கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் நவம்பர் 30-ம் தேதி வரை பொதுமுடக்க தளர்வுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கண்காட்சி அரங்குகளை வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம். சமூக, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சாரம், மதம், அரசியல் நிகழ்வுகள் நடைபெறும் அரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம். அதிகபட்சம் 200 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ளலாம்.
பள்ளிகளில் வருகைப்பதிவு கட்டாயம் கிடையாது. மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லலாம். ஆனால் பெற்றோரின் எழுத்துபூர்வ சம்மதம் அவசியம். ஆன்லைன் வகுப்புகளை தொடரலாம்” என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.