நிவர் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் நிவாரண பணிகள் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதன் பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
“நிவர் புயலை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படும். கட்டிட விபத்து, இடி-மின்னல் விபத்துகள், பாம்பு, பூச்சிக் கடிகள் ஆகியவற்றுக்கு தேவையான மருந்துகளை அரசு மருத்துவமனைகள் போதிய அளவில் இருப்பு வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் அளவை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்” என்று சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.