அரசு பள்ளிகளில் சேர வாருங்கள்.. மாணவர் சேர்க்கை தொடக்கம்…

அரசு பள்ளிகளில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை தொடங்குகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

தொலைக்காட்சி வாயிலாக அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அரசு பள்ளிகளில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு திங்கள்கிழமை முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார்.

இதன்படி தமிழகம் முழுவதும் செயல்படும் அரசு பள்ளிகளில் திங்கள்கிழமை மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவியர், பெற்றோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

தனிமனித இடையவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியால் தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை குறைவாகவே உள்ளது.

எனவே அரசு பள்ளிகளில் மாணவர்கள சேர்க்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *