இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
“அரசு இணைய சேவை மையங்கள் இல்லாத பகுதிகளில் பொதுமக்கள் அரசின் சேவைகளைப் பெற தனியார் இ-சேவை மையங்கள் நடத்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தனியார் இ-சேவை மையங்களில் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த புகார்கள் உறுதி செய்யப்படும்போது, தனியார் இணைய சேவை மையங்கள் எவ்வித முன்அறிவிப்பும் இன்று உடனடியாக முடக்கப்படும். அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் பொதுமக்கள் 1800 425 2911 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்” என்று தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.