நத்தம்மேடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம், நத்தம்மேடு ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் பவானி நகரில் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ஸ்ரீ ஜெரிஜோன்ஸ் பிரியதர்ஷினி தலைமைத் தாங்கினார். துணை தலைவர் திரு.சொ.ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் இந்திரா, ஒன்றிய கவுன்சிலர் திரு. V ஹரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்களப்பணியாளர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஊராட்சி மன்ற செயலாளர் திரு. M கோபிநாத், வரவு செலவுகள், நடந்து முடிந்த பணிகள், நடைபெற உள்ள பணிகள் குறித்து விரிவாக பேசினார். கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு நகரின் நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துக்கொண்டு தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து மனுக்களை தலைவர் திருமதி ஸ்ரீ. ஜெரிஜோன்ஸ் பிரியதர்ஷினியிடம் கொடுத்தனர்.

நத்தம்மேடு ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் ஆக்டிவ் நலச்சங்கத்தின் துணைத் தலைவர் இப்ராகிம் பேசுகிறார். அருகில் தலைவர் ஸ்ரீ ஜெரிஜோன்ஸ் பிரியதர்ஷினி, ஒன்றிய கவுன்சிலர் V ஹரி

இந்தக் கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் திருமதி. B மகேஷ்வரி, திருமதி I மஞ்சுளா, திருமதி K மலர்கொடி, திரு N செல்வம், திருமதி S கௌரி, திருமதி D பானுமதி திரு J சந்திரபோஸ், திருமதி R விஜிலா , கிராம நிர்வாக அலுவலர் திரு G புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். பெண்களுக்கு எதிரான குழந்தைத் திருமணங்கள் பெண் சிசுக் கொலைகள் பற்றி உறுதிமொழிகளும் எடுக்கப்பட்டன.

கூட்டத்தில் எங்கள் பகுதியில் சாலை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வந்தோம். ஊராட்சி மன்ற தலைவராக ஸ்ரீ.ஜெரிஜோன்ஸ் பிரியதர்ஷினியிடம் கோரிக்கைகளை வைத்ததும் உடனடியாக சாலைகளை அமைத்துக்கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் கொரோனா காலக்கட்டத்தில் ஊராட்சியில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தார்.

நத்தம்மேடு ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொண்ட பொதுமக்கள்

அதனால்தான் இந்த ஊராட்சியில் கொரோனா தொற்று குறைவாக இருந்தது. தெரு விளக்கு, குப்பை சேகரிப்பு உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளில் அதிக அக்கறைகளை தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள் ஆகியோர் செலுத்தி வருகிறார்கள். அதனால் திருவள்ளூர் மாவட்டத்திலேயே சிறந்த ஊராட்சி மன்றமாக நத்தமேடு தேர்வு செய்யப்பட காலம் விரைவில் உள்ளது.

மக்களின் அடிப்படை வசதிகளில் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்று நலச்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்பிறகு ஒவ்வொரு நலச்சங்க நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகளை கிராம சபை கூட்டத்தில் தெரிவித்தனர்.

நத்தம்மேடு ஊராட்சி கிராம சபை கூட்டம்

குறிப்பாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை, கழிவு நீர் கால்வாய் அமைத்தல், மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. இதையடுத்து நத்தமேடு ஊராட்சியில் உள்ள பெருமாள்புரம், பாலமுருகன் அவென்யூ பகுதியில் செயல்படும் ஆக்டிவ் நலச்சங்கத்தின் தலைவர் மல்லிகா, துணை தலைவர் இப்ராகிம், செயலாளர் உமாமகேஷ்வரி ஆகியோர் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். பின்னர் துணை தலைவர் இப்ராகிம் பேசுகையில், நான் ஒன்றரை ஆண்டுகளாக இந்தப்பகுதியில் வசித்துவருகிறேன்.

இந்தப்பகுதிக்கு வந்தபோது சேறும் சகதியுமாகவும் பள்ளம் மேடாக சாலை இருந்தன. உடனடியாக பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய கவுன்சிலர் ஹரி, வார்டு கவுன்சிலர் ஆகியோரிடம் சாலை அமைக்க நலசங்கம் சார்பில் கோரிக்கை வைத்தோம். உடனடியாக சாலை அமைக்கப்பட்டது. தற்போது கழிவு நீர், குப்பைகளை கொட்டுவதில் பிரச்னைகள் உள்ளன. அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

நத்தம்மேடு ஊராட்சி கிராம சபை கூட்டம்

கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அலுவலகத்துக்குச் செல்லும்போது குப்பைகளை எடுத்துச் சென்று வேறுபகுதியில் கொட்ட வேண்டிய சூழல் உள்ளது என்றார். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாயத்து தலைவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நலச்சங்கங்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள் செய்த பணிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *