93 வயது பாட்டியின் அசத்தல் நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவை சேர்ந்தவர் கவுரவ் சகா. இவர் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.
இவரது பாட்டியின் 93-வது வயது பிறந்த நாளை குடும்பத்தினர் சில நாட்களுக்கு முன்பு உற்சாகமாகக் கொண்டாடினர்.
மெழுகுவர்த்தி ஏற்றி, கேக் வெட்டி வீடே அமர்களமாக மாறிவிட்டது. கொண்டாட்டத்தின் இறுதியில் 93-வது வயது பாட்டி, பாலிவுட் பாடலுக்கு அசத்தலாக நடனமாடினார்.
பாட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டம், அசத்தல் நடனத்தை சவுரவ் சகா வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். பாட்டியின் பெயர் தெரியாவிட்டாலும் நாடு முழுவதும் அவர் பிரபலமாகிவிட்டார்.