காற்று மாசு நகரங்களில் பட்டாசுக்கு தடை

காற்று மாசு மோசமான நகரங்களில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு தொடர்பான வழக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது.

“கொரோனா காலத்தில் காற்றுமாசு மோசமாக உள்ள நகரங்களில் அனைத்து வகையான பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் ஒட்டுமொத்த தடை விதிக்கப்படுகிறது. 

காற்று மாசு மிதமாக உள்ள மாநகரங்கள், நகரங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையின்போது நள்ளிரவு 11.55 முதல் 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்” என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *