ஜன. 3-ல் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு

ஜன. 3-ல் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலர் கே.நந்தகுமார் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்.

“குரூப் 1 முதல் நிலைத் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவன உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் பதவிகளுக்கான தேர்வு ஏப்ரல் 25, 26-ம் தேதிகளில் நடைபெறும் என்று அரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரு தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டன.

தற்போது குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜனவரி 3-ம் தேதி நடத்தப்படும்.

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவன உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் பதவிகளுக்கான தேர்வு ஜனவரி 9, 10 ஆகி தேதிகளில் நடைபெறும்” என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *