ஜிஎஸ்டி பங்கை வழங்க நிதியில்லை.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பெப்பே…

கடந்த 2017 ஜூலை 1-ம் தேதி நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறை அமல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி வரி வருவாயில் மாநில அரசுகளுக்கு சரிமசமாக பங்கு கிடைக்கும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது. ஜிஎஸ்டியால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்புக்கு ஐந்து ஆண்டுகள் வரை இழப்பீடு வழங்கவும் மத்திய அரசு ஒப்புக் கொண்டது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அண்மையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அண்மையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.


இந்த சூழ்நிலையில், மாநிலங்களுக்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி தொகையை அளிக்கும் நிலையில் மத்திய அரசு இல்லை என்று நாடாளுமன்ற நிதிக் குழுவிடம் மத்திய நிதிச் செயலாளர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


கொரோனா வைரஸால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக மாநிலங்களுக்கான பங்கை கொடுக்க முடியாத நிலையில் எழுந்துள்ளது என்று அஜய் பூஷண் பாண்டே விளக்கம் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. எனினும் மத்திய அரசு தரப்பில் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *