கூடுவாஞ்சேரி- சிங்கப்பெருமாள்கோவில் ரயில் நிலையங்கள் இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக கூடுவாஞ்சேரி-சிங்கபெருமாள்கோயில் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 11 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் சில நாட்களுக்கு முன்பு ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
சிங்கபெருமாள்கோவிலில் இருந்து புறப்பட்ட ரயில் 10 நிமிடங்களில் கூடுவாஞ்சேரிக்கு வந்து சேர்ந்தது. தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் டிராலி மூலம் ஆய்வு நடத்தினார்.