கொரோனா மருத்துவமனையில் நள்ளிரவில் தீ.. தூக்கத்திலேயே 8 நோயாளிகள் பலி..பலர் படுகாயம்

குஜராத்தின் அகமதாபாத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இன்று அதிகாலை (நள்ளிரவு 2 மணி ) தீ விபத்து நேரிட்டது.


அவசர சிகிச்சை பிரிவில் 10 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவர்கள் மீது தீப்பற்றியது. அங்கிருந்த நர்ஸ்கள் நோயாளிகள் மீது பற்றிய தீயை அணைக்க முயன்றார். ஆனால் அவர்களது பாதுகாப்பு உடையில் தீ பற்றியதால், உடைகளை கழற்றி எறிந்துவிட்டு நர்ஸ்கள் ஓடிவிட்டனர்.

தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு எரிந்து கருகியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு எரிந்து கருகியுள்ளது.


மருத்துவமனை ஊழியர்கள் யாரும் தீயை அணைக்க முன்வராத நிலையில் 8 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர். அருகில் இருந்த வார்டுகளுக்கும் தீ பரவியது. இதில் மேலும் 10 பேர் பலத்த தீக்காயமடைந்தனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. தீ பரவத் தொடங்கியதும் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அலறியடித்து ஓடினர். இதில் பலர் காயமடைந்துள்ளனர்.

தீ விபத்து நேரிட்ட மருத்துவமனையில் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நோயாளிகளின் உறவினர்கள்.


விபத்து குறித்து தீயணைப்பு அதிகாரி ராஜேஷ் பட் கூறுகையில், “மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து தீ மேலும் பரவியுள்ளது. 40 தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்” என்று தெரிவித்தனர்.


தீ விபத்து நேரிட்ட மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *