பள்ளி அரையாண்டு தேர்வு ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக பாடங்களை நடத்தி வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இப்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படவாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை காலத்துக்குப் பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று பள்ளி கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.