சென்னைக்கு இன்று 381-வது பிறந்த நாள்…

சென்னைக்கு இன்று 381-வது பிறந்த நாளாகும். இந்த நாளில் தலைநகர் சென்னைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்திருக்கும் இடத்தை வாங்கினார். கடந்த 1939-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி சென்னை உருவாக்கப்பட்டது.

சென்னப் பட்டனம்

சென்னையில் கிழக்கிந்திய கம்பெனி சார்பில் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. இந்த இடத்தை ஆங்கிலேயர்களுக்கு ஐயப்பன், வேங்கடப்பன் ஆகியோர் விற்றனர்.

அவர்களது நந்தை சென்னப்ப நாயக்கன் நினைவாக ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே அமைந்த ஊர் சென்னப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது.

கடந்த 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. அப்போது சென்னை மாகாணத்தின் தலைநகராக மதராஸாக மாறியது. கடந்த 1969-ம் ஆண்டில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வாழ்த்து.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வாழ்த்து.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் வசதி தமிழ்நாடு என்று பெயர் பெற்றம் செய்யப்பட்டது. கடந்த 1996-ம் ஆண்டு மதராஸ் என்ற பெயர் சென்னை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

19,000 மக்கள் தொகை

கடந்த 1646-ம் ஆண்டு சென்னையின் மக்கள் தொகை வெறும் 19 ஆயிரமாக மட்டுமே இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் வியாபாரம் பெருக, பெருக சென்னையின் மக்கள் தொகை அதிகரித்தது.

கிராமங்களாக இருந்த எழும்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் ஆகியவை வளர்ச்சி அடைந்தன.

கடந்த 1749-ம் ஆண்டில் சென்னையில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கடந்த 1856-ம் ஆண்டில் தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமாக ராயபுரம் உருவாக்கப்பட்டது. அதன்பின் 1873-ல் சென்ட்ரல் ரயில் நிலையமும் 1908-ம் ஆண்டில் எழும்பூர் ரயில் நிலையமும் உதயமாகின.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் நினைவாக ரிப்பன் மாளிகை, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் உள்பட சிவப்பு நிறத்தில் காணப்படும் பல்வேறு கட்டிடங்கள் இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.

முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சென்னை பெருநகரம் இன்று 381-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதையொட்டி முதல்வர் பழனிசாமி வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சென்னைக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படம்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சென்னைக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படம்.

“வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று! கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித்தந்த சென்னையின் வயது 381.

பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும்” என்று முதல்வர் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சென்னையின் பிறந்த நாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழகம், இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் சென்னைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தலால் சில வாரங்கள் சென்னை மாநகரம் வெறிச்சோடி காணப்பட்டது. இப்போது தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து இதர நாட்களில் பாதியளவு இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது.

பேருந்து சேவை, புறநகர் ரயில் சேவை, விரைவு ரயில் சேவை, முழுமையான விமான சேவை தொடங்கினால் மட்டுமே முழு இயல்பு நிலைக்கு சென்னை திரும்பும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *