புதிய ரேஷன் கார்டு – முதல்வர் ஸ்டாலின் குட் நியூஸ்

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முதலவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து தலைமை செயலகத்தில்ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “பொதுமக்களுக்கு நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு காலதாமதமின்றி வழங்க வேண்டும்.

ALSO READ

கொரோனா காலக்கட்டத்தில் கடனுதவி கேட்கும் சுயஉதவிக்குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், தொழில் முனையும் பெண்கள் போன்றவர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்க வேண்டும். பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் நியாயவிலைக்கடைகளை ஒரே துறையின் கீழ் செயல்படுத்த வேண்டும்” என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

ரேஷன் கார்டு

மேலும், வாடகைக்கட்டடங்களில் செயல்படும் கடைகளுக்கு சொந்தக் கட்டடங்கள், பொது விநியோகத்திட்டத்தை முழுமையாக கம்ப்யூட்டர் மயமாக்குதல், பெண் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல், சேமிப்பு கிடங்குகளை மேம்படுத்துதல், இணையவழியில் கண்காணித்தல், எடைக்குறை போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல், தரமான சேவைகளை வழங்குதல் உள்ளிட்டவைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.

இதையடுத்து கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாய கடன், நகைக்கடன், மானிய விலையில் உரம் மற்றும் விவசாய இடுபொருள்கள் வழங்குததல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

ஏற்கெனவே சட்டசபையில் புதியதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாள்களுக்கு கார்டு வழங்கப்படும் என ஆளுநர் தெரிவித்திருந்தார். அதன்தொடர்ச்சியாக நேற்று நடந்த ஆய்வு கூட்டத்திலும் காலதாமதமின்றி ரேஷன் கார்டுகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இதனால் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

ரேஷன் கார்டு
ரேஷன் கார்டு

காலதாமதத்துக்கு என்ன காரணம்?

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “சட்டசபை தேர்தல் காரணமாக புதியதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. தேர்தல் முடிந்தபிறகு கொரோனா நிதி உதவியை தமிழக அரசு அறிவித்தது. அதனால் அமலில் உள்ள ரேஷன் கார்டுகளை கணக்கீட்டு நிதியுதவி வழங்கும் பணிகள் நடந்தன.

இதனால் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம் என இணையதள மூலம் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மாதக்கணக்கில் அப்ரூவலாகாமல் உள்ளது. முதல்வர் உத்தரவையடுத்து நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்து உடனுக்குடன் ரேஷன் கார்டு சேவைகள் துரிதப்படுத்தப்படும்” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *