மோசடி வழக்கில் ஹரி நாடார் கைது

மோசடி வழக்கில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார்.

பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார்.

இவர் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 37,727 வாக்குகள் பெற்றார். இதன்காரணமாக திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா தோல்வியை தழுவினார். அவர் 70,614 வாக்குகளை பெற்றார். அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 74,153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த பின்னணியில் ரூ.16 கோடி மோசடி வழக்கில் கேரள மாநிலம் கோவளத்தில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் மீதான வழக்கின் முழுமையான விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *