காணாமல் போன கோயில் சிலைகளை கண்டுபிடிக்க உத்தரவு

காணாமல் போன கோயில் சிலைகளை கண்டுபிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துகள், நகைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடு காணாமல் போயுள்ளது. கோயில் சிலைகள், நகைகள் காணாமல் போயுள்ளன என்று சென்னை ஐகோர்ட்டில் வெங்கட்ராமன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு, வெங்கட்ராமன் தரப்பு வாதங்களை கேட்டபிறகு நீதிபதிகள் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தனர்.

“கோயில்களின் மாஸ்டர் பதிவேடு காணாமல் போனதாக மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு கவனிக்க வேண்டும். கோயில் சிலைகள், நகைகளை கண்டுபிடிக்க திட்டம் வகுக்க வேண்டும், சிலைகளை, நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை 3 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *