அக்னி நட்சத்திரம் தொடக்கம்

தமிழகத்தில் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது.

அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி தொடங்கியுள்ளது. தொடர்ந்து 25 நாட்கள் அதாவது 29-ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.

வெயிலில் இருந்து தப்பிக்க பருத்தி ஆடைகளை அணியலாம். நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ளலாம். முடிந்தவரை வெயிலில் செல்வதை தவிர்க்கலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *