சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஏப். 2 முதல் வெப்பம் உயரும்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஏப். 2 முதல் வெப்பம் உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு திசையில் இருந்து தமிழகத்தை நோக்கி தரைக்காற்று வீச சாத்தியக்கூறுகள் உள்ளன. இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் வெப்பநிலை உயரும். 

இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *