தென் தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு

டிசம்பர் 2-ம் தேதி தென்தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெர்று டிசம்பர் 2-ம் தேதி தென் தமிழக கடலோர பகுதியை நெருங்கும்.

இதன்காரணமாக நவ. 30-ம் தேதி தென் தமிழகம், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.

வரும் 1-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில், அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் கன முதல் மிக கனமழை இருக்கும் என்பதால், தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தென்தமிழகத்தில் கனமழை அல்லது அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *