அடுத்த சில நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால் மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் அதிகனமழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கன மழை முதல் அதிகனமழை பெய்யும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும்.
வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் கனமழையும் இதர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் டெல்லா மாவட்டங்களில் அதி கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கலப்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும்.
வரும் 26-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழையும் இதர வட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 27-ம் தேதி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்” என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.