நாளை முதல் மழை தீவிரமாகும்…

தமிழகத்தில் நாளை முதல் மழை தீவிரமாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். வரும் 2-ம் தேதி தமிழக கடற்கரையை நெருங்கும். காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.

இதன் காரணமாக டிசம்பர் 1,  2ம் தேதி தமிழகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தின்  சில இடங்களில் மிக கனமழை முதல் அதீத கன மழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது.

தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *