மகாராஷ்டிர தலைநகர் மும்பை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. அந்த மாநில மக்களுக்கு வருண பகவான் மூலம் அடுத்த சோதனை தொடங்கியுள்ளது. தலைநகர் மும்பை, தாணே உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது.
விளையாட்டு மைதானங்கள், பொதுவெளியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொரோனா மருத்துவமனைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ன. தலைநகர் மும்பை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மகாராஷ்டிராவின் மலாட் பகுதியில் மேற்கு எக்ஸ்பிரஸ் வே நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மகாராஷ்டிராவில் கன மழை பெய்யும் என்றும் பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி மும்பை வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
மழை காரணமாக கொரோனா வேகமாக பரவும். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்படும் என்று அரசு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.