12-ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு

வரும், 12, 13-ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாதம் 1-ம் தேதி தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

வரும் 12, 13-ம் தேதிகளில் சென்னை முதல் நாகை வரை கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *