தமிழகத்தில் 23-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 23-ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது சென்னையில் இருந்து 1,200 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும். அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வரும் 25-ம் தேதி தமிழக கடற்கரை அருகே வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதந்காரணமாக வரும் 23-ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *