13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“தமிழக கடலோரம் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதன்படி தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, கடலூர், மயிலாடுதுறை, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
தலைநகர் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.