ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் விநியோகிக்க சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
“சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். காரில் செல்வோர் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும்.
ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற விழிப்புணர்வு பதாகையை அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் வைக்க வேண்டும்”
என்று சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி கூறும்போது, “சட்டத்தை நாங்கள் கையில் எடுக்க முடியாது.
போலீஸார்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸாரின் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம்” என்று தெரிவித்தார்.