கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களின் பங்களிப்பு அவசியம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி மேல்நிலைப் பள்ளி, பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.


வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஆசிரியர்களின் பணி அவசியம். இதுபோன்ற பேரிடர் காலத்தில் ஆசிரியர்களின் சேவை தேவை. ஆசிரியர்கள் தலைமை பண்பு கொண்டவர்கள். அவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.


உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *