நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனித்துறையை ஏன் உருவாக்கக்கூடாது என்று தமிழக அரசிடம் ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
தென்மாவட்டங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் 225 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.
“நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏன் தனித்துறையை உருவாக்கக்கூடாது என்பது குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும். தனித்துறையை உருவாக்கினால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வேகம் பெறும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.