வழக்கறிஞர் ஸ்டிக்கருக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், போலீஸாரிடமிருந்து தப்பிக்க வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. வழக்கறிஞர் ஸ்டிக்கரை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு விசாரித்தது.
“சட்டத்தின் பிடியில் இருந்தும் போலீஸாரிடமிருந்தும் தப்பிக்க வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கரை பயன்படுத்துகின்றனர். இதை தடுக்க வழக்கறிஞர் ஸ்டிக்கருக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? இதுகுறித்து இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில், தமிழக டிஜிபி பதில் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.