ஒவ்வொரு துறைகளிலும் ஊழல் தடுப்புப் பிரிவு அமைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அரசு அதிகாரிகளின் ஊழல் விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார்.
அரசு துறைகளில் ஊழல் அதிகரித்துவிட்டது. இதனை லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் சமாளிக்க முடியவில்லை. அரசு ஊழியர்களை கண்காணிக்கவும், அவர்களது சொத்துகளை சரிபார்க்கவும் உரிய நடைமுறை இல்லை. எனவே ஒவ்வொரு துறையிலும் ஊழல் தடுப்பு பிரிவை உருவாக்க வேண்டும். அந்த பிரிவு, ஒவ்வொரு ஊழியரின் சொத்து, பணிதிறன், நேர்மை குறித்து ஆய்வு செய்து துறைத் தலைவருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.