ஆன்லைன் சீட்டு விளையாட்டு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
“தெலங்கானா மாநிலத்தில் ஆன்லைன் சீட்டு விளையாட்டுக்கு அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது. பணத்தை மையமாக வைத்து விளையாடப்படும் ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளால் இளைஞர்களின் நேரம் வீணாகிறது. சிந்தனைத் திறன் பாதிக்கப்படுகிறது.
இந்த இணையதள சூதாட்டத்தை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் உரிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.