கால்வாய் ஆக்கிரமிப்பு.. ஐகோர்ட் கண்டிப்பு…

கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் சென்னை, திருவள்ளூர் ஆட்சியர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என்று சென்னை ஐகோர்ட் கண்டித்துள்ளது.

சென்னையில் அம்பத்தூர் எஸ்டேட் முதல் அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் வரை 40 அடி நீ்ர்வழி கால்வாய் உள்ளது. ஆக்கிரமிப்புகளால் கால்வாய் சுருங்கியுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் குடியிருப்புவாசிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது.

 “கால்வாயை பாதுகாக்க கோரி 4 ஆண்டுகளுக்கு முன்பு மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அதிகாரியை எதிர்மனுதாரராக வழக்கில் சேர்க்கிறோம். 

ஆக்கிரப்புகளை அகற்ற 2 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திருவள்ளூர், சென்னை மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *