மலைப் பகுதிகளில் மனைகளை வரன்முறை செய்ய மேலும் ஓராண்டு அவகாசம்

மலைப் பகுதிகளில் மனைகளை வரன்முறை செய்ய மேலும் ஓராண்டு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதன்படி கடந்த 2017-ம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்தலாம் என்று வீட்டுவசதித்துறை அரசாணை வெளியிட்டது. இதற்காக பிரத்யேகமாக இணையதளம் உருவாக்கப்பட்டது.

கடந்த 2017 அரசாணையில் மலைப்பகுதி கிராமங்களில் உள்ள மனைகளை வரன்முறைபடுத்துவது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதன்காரணமாக கோவை, மேட்டுப்பாளையம், திண்டுக்கள், ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், திருநெல்வேலி, அம்பாசமுத்திரத்தில் உள்ள மலைப்பகுதி கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந் நிலையில் கடந்த மார்ச் 22-ம் தேதி மலைப்பகுதிகளில் உள்ள அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்யலாம் என்று அரசாணை வெளியிட்டது. இதற்காக, 6 மாதம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த கால அவகாசம் செப். 22-ம் தேதியுடன் முடிவடைந்தது.

ஆனால், இன்னும் பலர் வரன்முறை செய்ய விண்ணப்பிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்ய மேலும் ஓராண்டு கால நீட்டிப்பு செய்து தமிழக அரசின் வீட்டு வசதித்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *