புரெவி புயல்.. 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை…

புரெவி புயல் அச்சுறுத்தலால் 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

“வங்கக் கடலில் உருவான புரெவி புயல் மன்னார் வளைகுடா பகுதியில் பாம்பனுக்கு அருகே நிலை கொண்டுள்ளது. இந்த புயல் நாளை அதிகாலை பாம்பன்- கன்னியாகுமரிக்கு இடையே தென்தமிழக கடற்கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் கரையை கடக்கும்போது பெரும் மழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளது. எனவே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக வரும் ஜனவரி மாதம் ஏதாவது ஒரு சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும்” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *