ஏப். 1 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடந்த ஜனவரி 19-ம் தேதி 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன. பிப்ரவரி 8-ம் தேதி முதல் முதல் 9 பிளஸ் 2 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் மே 3-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதன்காரணமாக மார்ச் 31-ம் தேதியோடு பள்ளிகளை நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்றும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.