தேர்தல் நாளில் விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
“தேர்தல் நாளில் ஊதியத்துடன்கூடிய விடுமுறை வழங்க வேண்டும். அவ்வாறு விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும்” என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.