வண்டலூர் பூங்காவுக்கு 9-ம் தேதி விடுமுறை

வண்டலூர் பூங்காவுக்கு 9-ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 182 இனங்களை சேர்ந்த 2,382 வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி அக். 9-ம் தேதி வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்று பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *