தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சிvயில் பேசினார்.
“கொரோனா பேரிடர் சூழலை கருத்தில் கொண்டு 100 படுக்கைகளுக்கு மேல் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். புதிதாக 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தொடங்க, அங்கு ஆக்சிஜன் கட்டமைப்பு வசதி இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்” என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.