தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, பூந்தமல்லி பொது வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பூந்தமல்லியில் 300-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றார்.
“ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அதேநேரம் இரவு 10 மணி வரை ஓட்டல்கள் செயல்பட அனுமதிக்க கோருகிறோம்.
பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விக்கிரமராஜா வலியுறுத்தினார்.